உள்ளடக்கத்துக்குச் செல்

2024 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 இந்தியப் பொதுத் தேர்தல்

← 2019 19 ஏப்பிரல் – 1 சூன் 2024 (2024-04-19 – 2024-06-01) 2029 →

மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும்
அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்968,821,926[1]
வாக்களித்தோர்66.33% ( 1.07%)[a]
  First party Second party
 

தலைவர் நரேந்திர மோதி மல்லிகார்ச்சுன் கர்கெ
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தே.ச.கூ. இந்தியா
தலைவரான
ஆண்டு
12 செப்டம்பர் 2013 26 அக்டோபர் 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
‎வாரணாசி கர்நாடகம் (மாநிலங்களவை)
முந்தைய
தேர்தல்
37.36%, 303 இடங்கள் 19.49%, 52 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
240 99
மாற்றம் 63 47
மொத்த வாக்குகள் 235,973,935 136,759,064
விழுக்காடு 36.56% 21.19%
மாற்றம் 0.8ச.வீ 1.7சவீ
கூட்டணி இடங்கள் 293 235


முந்தைய பிரதமர்

நரேந்திர மோதி
பா.ஜ.க

தேர்தலுக்குப் பின் பிரதமர்

நரேந்திர மோதி
பா.ஜ.க


2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் 18-ஆவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவில் 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை நடைபெற்றது.[2] ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது.[3][4]

1.4 பில்லியன் மக்கள் தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 70% க்கு சமம்.[5][6][7] 64.2 கோடி (642 மில்லியன்) வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றனர், இவர்களில் 31.2 கோடி (312 மில்லியன்) பேர் பெண்கள், இது பெண் வாக்காளர்களின் அதிகபட்ச பங்கேற்பு ஆகும்.[8][9] ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்களும் பாதுகாப்புப் படை வீரர்களும் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தலாகும், முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடித்தது, 1951-52 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது இரண்டாவது முறையாகும்.

2019, 2014 தேர்தல்களில் நடப்புப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாசக) அறுதிப்பெரும்பான்மை-குறைந்தபட்சம் 272 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோதி போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசு உட்படப் பல பிராந்தியக் கட்சிகளால் 2023 இல் உருவாக்கப்பட்ட "இந்தியா" என அழைக்கப்படும் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்தது. மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வெறுப்புப் பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் விமர்சிக்கப்பட்டது,[10] மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) சில இடங்களில் செயலிழந்தது,[11][12] பாஜக தனது அரசியல் எதிரிகளை அடக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[13]

ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களும், 12 சட்டப் பேரவைகளில் உள்ள 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

மோதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவையில் 543 இடங்களில் 293 இடங்களைப் பெற்றாலும், எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் கணித்ததை விட அதிக இடங்களைப் பெற்றதால், பாஜக அதன் பெரும்பான்மையை இழந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) 235 இடங்களைப் பெற்றது, இந்திய தேசிய காங்கிரசு 99 இடங்களைப் பெற்றது.[14][15][16]

முக்கிய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் பாசக மற்றும் அதன் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) தீர்க்கமான வெற்றியைக் கணித்திருந்தன. இருப்பினும், பாசக தனித்து 240 இடங்களை மட்டுமே வென்றது, இது 2019 இல் அக்கட்சி தனித்துப் பெற்ற 303 இடங்களிலிருந்து குறைந்தது, அத்துடன் மக்களவையில் அதன் தனிப்பெரும்பான்மையையும் இழந்தது, அதேவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்த 543 மக்களவை இடங்களில் 293 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[17] இந்தியாக் கூட்டணி எதிர்பார்ப்புகளையும் மீறி, 234 இடங்களைப் பெற்றது, இவற்றில் 99 இடங்களை காங்கிரசு தனித்து வென்றது, 10 ஆண்டுகளில் முதல் முறையாக இக்கட்சி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[18][19][20] மக்களவையில் ஏழு சுயேச்சைகளும், அணிசேராக் கட்சிகளின் பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.[21][22][23] 2024 சூன் 7 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 293 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை நரேந்திர மோதி உறுதிப்படுத்தினார்.[24] 2024 சூன் 9 அன்று நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.[25] முதல் முறையாக ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு இவர் தலைமை தாங்கினார்,[26] ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய பிராந்தியக் கட்சிகள் மோதி அரசின் இரண்டு முக்கிய பங்காளிகளாக உருவெடுத்தன.[27][28][29]

பின்னணி

பதினேழாவது மக்களவையின் பதவிக்காலம் 2024 சூன் 16 முடிவடைந்தது.[30] முந்தைய பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் நடுவண் அரசை அமைத்தது.[31]

தேர்தல் முறை

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 83 இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து 543 தொகுதிகளிலிருந்தும் மக்களவைக்கு ஒவ்வொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[32] 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 104வது திருத்தம் ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களை ரத்து செய்தது.[33]

இந்த தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட தொகுதியில் குடியிருத்தல் அல்லது வாக்களிக்கப் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேர்தல் நாளின் போது வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் மற்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.[34] குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிலருக்கு மற்றும் சிறையிலிருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் எவராலும் வாக்களிக்க இயலாது.[35] இந்த தேர்தலில் ஏறத்தாழ 96.8 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.[36][37][38]

மார்ச் 2024 இல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்யவும், காகித வாக்குச்சீட்டுகள் மற்றும் கையில் எண்ணும் முறைக்கு மாறவும் உத்தரவு பிறப்பிக்குமாறு காங்கிரசு கட்சி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.[39] இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[40]

தேர்தல் அட்டவணை

2024 மக்களவை தேர்தல் அட்டவணை
தேர்தல் செயல்பாடு கட்டம்
I II III IV V VI VII
அறிவிக்கை நாள் 20 மார்ச் 28 மார்ச் 12 ஏப்ரல் 18 ஏப்ரல் 26 ஏப்ரல் 29 ஏப்ரல் 7 மே
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27 மார்ச் 4 ஏப்ரல் 19 ஏப்ரல் 25 ஏப்ரல் 3 மே 6 மே 14 மே
வேட்புமனு சரிபார்த்தல் 28 மார்ச் 5 ஏப்ரல் 20 ஏப்ரல் 26 ஏப்ரல் 4 மே 7 மே 15 மே
மனுக்களைத் திரும்ப பெறக் கடைசி நாள் 30 மார்ச் 8 ஏப்ரல் 22 ஏப்ரல் 29 ஏப்ரல் 6 மே 9 மே 17 மே
தேர்தல் நாள் 19 ஏப்ரல் 26 ஏப்ரல் 7 மே 13 மே 20 மே 25 மே 1 சூன்
வாக்கு எண்ணிக்கை 4 சூன்
தொகுதிகளின் எண்ணிக்கை 101 12 87 12 95 96 49 57 57
கட்டம்-வாரியாக ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல் தொகுதிகள்
மாநிலம்/ஒன்றியம் மொத்தத்

தொகுதிகள்

தேர்தல் தேதிகளும் தொகுதிகளின் எண்ணிக்கையும்
கட்டம் 1 கட்டம் 2 கட்டம் 3 கட்டம் 4 கட்டம் 5 கட்டம் 6 கட்டம் 7
19 ஏப்ரல் 26 ஏப்ரல் 07 மே 13 மே 20 மே 25 மே 1 சூன்
ஆந்திரப் பிரதேசம் 25 25
அருணாசலப் பிரதேசம் 2 2
அசாம் 14 5 5 4
பீகார் 40 4 5 5 5 5 8 8
சத்தீசுகர் 11 1 3 7
கோவா 2 2
குசராத்து 26 26
அரியானா 10 10
இமாச்சலப் பிரதேசம் 4 4
சார்க்கண்டு 14 4 3 4 3
கருநாடகம் 28 14 14
கேரளம் 20 20
மத்தியப் பிரதேசம் 29 6 6[b] 9[b] 8
மகாராட்டிரம் 48 5 8 11 11 13
மணிப்பூர் 2 1 12[c] 12[c]
மேகாலயா 2 2
மிசோரம் 1 1
நாகாலாந்து 1 1
ஒடிசா 21 4 5 6 6
பஞ்சாப் 13 13
இராசத்தான் 25 12 13
சிக்கிம் 1 1
தமிழ்நாடு 39 39
தெலங்காணா 17 17
திரிபுரா 2 1 1
உத்தரப் பிரதேசம் 80 8 8 10 13 14 14 13
உத்தராகண்டம் 5 5
மேற்கு வங்காளம் 42 3 3 4 8 7 8 9
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1
சண்டிகர் 1 1
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 2 2
தில்லி 7 7
சம்மு காசுமீர் 5 1 1 1 1 1
இலடாக்கு 1 1
இலட்சத்தீவுகள் 1 1
புதுச்சேரி 1 1
தொகுதிகள் 543 101 12 87 12 95 96 49 57 57
கட்ட முடிவில் மொத்தத் தொகுதிகள் 101 12 189 285 380 429 486 543
கட்ட முடிவில் முடிவான மொத்த தொகுதிகள் % 18.69 34.80 52.48 69.98 79.01 89.50 100
  1. அஞ்சல் வாக்குகள் உள்ளடக்கப்படவில்லை
  2. 2.0 2.1 பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் மரணம் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் தொகுதியில் தேர்தல் 26 ஏப்ரல் 2024 (கட்டம் 2) இருந்து 7 மே 2024 ஆக (கட்டம் 3) மாற்றப்பட்டது.[41]
  3. 3.0 3.1 மணிப்பூரில் உள்ள வெளி மணிப்பூர் தொகுதியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.[42]

கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

தேசிய அளவிலான

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

      இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி

  கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான போட்டி

பிற கட்சிகள்/கூட்டணிகள்

வாக்களிப்பு வீதம்

மூலம்:[43][44][45]
மாநிலம்/ஆ.பு மொத்தம் கட்டம் வாரியாக வாக்குப்பதிவு (சதவீதம்)
கட்டம் 1

19 ஏப்ரல்

கட்டம் 2

26 ஏப்ரல்

கட்டம் 3[46]

7 மே

கட்டம் 4

13 மே

கட்டம் 5

20 மே

கட்டம் 6

25 மே

கட்டம் 7

1 சூன்

இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் % இடங்கள் %
ஆந்திரப் பிரதேசம் 25 81.86  –  –  –  –  –  – 25 81.86  –  –  –  –  –  –
அருணாசலப் பிரதேசம் 2 77.68 2 77.68  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
அசாம் 14 81.62 5 78.25 5 81.17 4 85.45  –  –  –  –  –  –  –  –
பீகார் 40 4 49.26 5 59.45 5 59.14 5 58.21 5 56.76 8 57.18 8 53.29
சத்தீசுகர் 11 72.17 1 68.29 3 76.24 7 71.98  –  –  –  –  –  –  –  –
கோவா 2 76.06  –  –  –  – 2 76.06  –  –  –  –  –  –  –  –
குசராத்து 26 60.13  –  –  –  – 25 60.13  –  –  –  –  –  –  –  –
அரியானா 10 64.80  –  –  –  –  –  –  –  –  –  – 10 64.80  –  –
இமாச்சலப் பிரதேசம் 4 70.90  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 4 70.90
சார்க்கண்டு 14  –  –  –  –  –  – 4 66.01 3 63.21 4 65.39 3 70.88
கருநாடகம் 28 70.64  –  – 14 69.56 14 71.84  –  –  –  –  –  –  –  –
கேரளம் 20 71.27  –  – 20 71.27  –  –  –  –  –  –  –  –  –  –
மத்தியப் பிரதேசம் 29 66.87 6 67.75 6 58.59 9 66.74 8 72.05  –  –  –  –  –  –
மகாராட்டிரம் 48 61.29 5 63.71 8 62.71 11 63.55 11 62.21 13 56.89  –  –  –  –
மணிப்பூர் 2 80.47 1 12 76.10 12 84.85  –  –  –  –  –  –  –  –  –  –
மேகாலயா 2 76.60 2 76.60  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
மிசோரம் 1 56.87 1 56.87  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
நாகாலாந்து 1 57.72 1 57.72  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
ஒடிசா 21 74.51  –  –  –  –  –  – 4 75.68 5 73.50 6 74.45 6 74.41
பஞ்சாப் பகுதி 13 62.80  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 13 62.80
இராசத்தான் 25 61.34 12 57.65 13 65.03  –  –  –  –  –  –  –  –  –  –
சிக்கிம் 1 79.88 1 79.88  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
தமிழ்நாடு 39 69.72 39 69.72  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
தெலங்காணா 17 65.67  –  –  –  –  –  – 17 65.67  –  –  –  –  –  –
திரிபுரா 2 80.92 1 81.48 1 80.36  –  –  –  –  –  –  –  –  –  –
உத்தரப் பிரதேசம் 80 56.92 8 61.11 8 55.19 10 57.55 13 58.22 14 58.02 14 54.04 13 55.85
உத்தராகண்டம் 5 57.22 5 57.22  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
மேற்கு வங்காளம் 42 3 81.91 3 76.58 4 77.53 8 80.22 7 78.45 8 82.71 9 76.80
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 64.10 1 64.10  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
சண்டிகர் 1 67.98  –  –  –  –  –  –  –  –  –  –  –  – 1 67.98
தாத்ரா/நகர் அவேலி/தாமன்/தியூ 2 71.31  –  –  –  – 2 71.31  –  –  –  –  –  –  –  –
தில்லி 7 58.69  –  –  –  –  –  –  –  –  –  – 7 58.69  –  –
சம்மு காசுமீர் 5 58.58 1 68.27 1 72.22  –  – 1 38.49 1 59.10 1 55.40  –  –
இலடாக்கு 1 71.82  –  –  –  –  –  –  –  – 1 71.82  –  –  –  –
இலட்சத்தீவுகள் 1 84.16 1 84.16  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
புதுச்சேரி 1 78.90 1 78.90  –  –  –  –  –  –  –  –  –  –  –  –
மொத்தம் 543 66.33 101 12 66.14 87 12 66.71 93 65.68 96 69.16 49 62.20 58 63.37 57 63.88

இறுதி முடிவுகள்

தேர்தலில் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு

  பாசக (44.20%)
  இதேகா (18.24%)
  சக (6.82%)
  அஇதிகா (5.35%)
  திமுக (4.06%)
  தெதேக (2.21%)
  ஜத(ஐ) (2.95%)
  சிசே (1.29%)
  ஏனைய (13.03%)

தேர்தலில் கட்சிகளின் வாக்குப் பங்கு

  பாசக (36.56%)
  இதேகா (21.96%)
  சக (4.58%)
  அஇதிகா (4.37%)
  பசக (2.04%)
  தெதேக (1.98%)
  திமுக (1.82%)
  ராசத (1.57%)
  ஏனைய (22.87%)

முதல் சுற்றைத் தொடர்ந்து, குசராத்தில் உள்ள சூரத் தொகுதியின் வேட்பாளரான முகேசு தலால், மற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பாசக தனது முதல் இடத்தை வென்றது.[47][48] போட்டி வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் சான்றளித்ததால், அந்தத் தொகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.[49]

ஒட்டுமொத்த தேர்தல் முடிவு நரேந்திர மோதிக்கு ஒரு "அதிர்ச்சி" என்று விமர்சிக்கப்பட்டது,[50][51] பாசக 400 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்த்ததை விடக் குறைந்துவிட்டது.[52] தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பாசக-விற்கு அமோகப் பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும், தேர்தல் நாளன்றைய கணிப்புகளை விட இந்தியக் கூட்டமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது,[53] உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களில் அது எதிர்பார்த்ததை விடப் பெரும் வெற்றியடைந்தது.[54] மக்களவையில் என்.டி.ஏ பெரும்பான்மையைத் தக்கவைக்க, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவைத் தளமாகக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பெற்ற 28 தொகுதிகளை பாசக நம்ப வேண்டியிருந்தது.[55][56][57]

கட்சி/கூட்டணி வாரியாக முடிவுகள்

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
தேசிய
சனநாயகக்
கூட்டணி

(தேசகூ)
பாரதிய ஜனதா கட்சி23,59,73,935240–63
தெலுங்கு தேசம் கட்சி1,27,75,27016+13
ஐக்கிய ஜனதா தளம்80,39,66312–4
சிவ சேனா74,01,4477–11
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)28,10,2505+5
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)21,73,7012+1
ஜனசேனா கட்சி2+2
இராஷ்டிரிய லோக் தளம்2+2
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்4,58,67710
தேசியவாத காங்கிரசு கட்சி20,59,1791–4
லிபரல் ஐக்கிய மக்கள் கட்சி4,88,9951+1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா1,64,3961+1
அப்னா தளம் (சோனேலால்)8,08,2451–1
அசாம் கண பரிசத்12,98,7071+1
இந்துசுதானி அவாம் மோர்ச்சா1+1
பாட்டாளி மக்கள் கட்சி00
பாரத தர்ம ஜன சேனா00
தமிழ் மாநில காங்கிரசு00
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்00
தேசிய மக்கள் கட்சி4,17,9300–1
நாகாலாந்து மக்கள் முன்னணி2,99,5360–1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி0–1
இராட்டிரிய லோக் மோர்ச்சா00
இராட்டிரிய சமாச் கட்சி00
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி00
சுயேச்சைகள்0–1
மொத்தம்293–60
இந்தியத்
தேசிய
வளர்ச்சியை
உள்ளடக்கிய
கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு13,67,59,06499+47
சமாஜ்வாதி கட்சி2,95,49,38137+32
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு2,82,13,39329+7
திராவிட முன்னேற்றக் கழகம்1,17,54,71022– 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)1,13,42,5534+1
இராச்டிரிய ஜனதா தளம்1,01,07,4024+4
சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)95,67,7799+9
ஆம் ஆத்மி கட்சி71,47,8003+2
தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) NCPSP59,21,1628+8
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி31,57,18420
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா26,52,9553+2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை17,36,7712+2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்17,16,18630
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி11,47,0412– 1
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி2+1
பாரத் ஆதிவாசி கட்சி1+1
கேரளக் காங்கிரசு10
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்1+1
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி RLTP5,96,95510
புரட்சிகர சோசலிசக் கட்சி10
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு2,89,94100
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி4,35,98000
விக்காசீல் இன்சான் கட்சி00
அசாம் ஜாதியப் பரிசத்00
கேரள காங்கிரசு (எம்)2,77,36500
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி00
மொத்தம்234
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி1,33,16,0394–18
சிரோமணி அகாலி தளம்18,14,3181–1
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்14,00,2151–1
ஜோரம் மக்கள் இயக்கம்2,08,5521+1
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)1+1
மக்கள் குரலின் கட்சி (மேகாலயா)5,71,0781+1
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்89,52,5870–1
பகுஜன் சமாஜ் கட்சி1,31,53,8180–10
கர்நாடக இராட்டிரிய சமித்தி00
பிஜு ஜனதா தளம்94,13,3790–12
உத்தம பிரசாக்கீயக் கட்சி00
பாரத் இராட்டிர சமிதி36,57,2370–9
சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)00
இந்திய தேசிய லோக் தளம்2,26,97500
ஜனநாயக ஜனதா கட்சி1,13,82700
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்11,28,61600
கோண்ந்வானா கணதந்திர கட்சி00
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி AIUDF6,25,9540–1
புரட்சிகர கோன்சு கட்சி64,57800
சிக்கிம் சனநாயக முன்னணி77,17100
போடோலாந்து மக்கள் முன்னணி7,77,57000
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி3,50,9670–1
மிசோ தேசிய முன்னணி1,40,2640–1
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி44,56300
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி23,26800
ஏனைய கட்சிகள்0–2
சுயேச்சைகள்7–1
நோட்டா63,72,220
மொத்தம்5430
பதிவான வாக்குகள்/வருகை96,88,21,926
மூலம்: ECI

மாநிலம் அல்லது ஒன்றிய ஆட்புலங்கள் வாரியாக

மாநிலம்/ஒன்றிய ஆட்புலம் தொகுதிகள்
தேசகூ இந்தியா ஏனையவை
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1 0 0
ஆந்திரப் பிரதேசம் 25 21 0 4
அருணாசலப் பிரதேசம் 2 2 0 0
அசாம் 14 11 3 0
பீகார் 40 30 9 1
சண்டிகர் 1 0 1 0
சத்தீசுகர் 11 10 1 0
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 2 1 0 1
தில்லி 7 7 0 0
கோவா (மாநிலம்) 2 1 1 0
குசராத்து 26 25 1 0
அரியானா 10 5 5 0
இமாச்சலப் பிரதேசம் 4 4 0 0
சம்மு காசுமீர் 5 2 2 1
சார்க்கண்டு 14 9 5 0
கருநாடகம் 28 19 9 0
கேரளம் 20 1 19 0
இலடாக்கு 1 0 0 1
இலட்சத்தீவுகள் 1 0 1 0
மத்தியப் பிரதேசம் 29 29 0 0
மகாராட்டிரம் 48 17 30 1
மணிப்பூர் 2 0 2 0
மேகாலயா 2 0 1 1
மிசோரம் 1 0 0 1
நாகாலாந்து 1 0 1 0
ஒடிசா 21 20 1 0
புதுச்சேரி 1 0 1 0
பஞ்சாப் பகுதி 13 0 10 3
இராசத்தான் 25 14 11 0
சிக்கிம் 1 1 0 0
தமிழ்நாடு 39 0 39 0
தெலங்காணா 17 8 8 1
திரிபுரா 2 2 0 0
உத்தரப் பிரதேசம் 80 36 43 1
உத்தராகண்டம் 5 5 0 0
மேற்கு வங்காளம் 42 12 30 0
மொத்தம் 543 293 234 16

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Largest electorate for General Elections - over 96.88 crore electors registered across the country". Archived from the original on 3 May 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  2. "2024 இந்தியாவின் பொதுத் தேர்தல்". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
  3. Clinch, Matt (4 June 2024). "India's Narendra Modi declares victory despite election blow". CNBC இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604213407/https://www.cnbc.com/2024/06/04/indias-narendra-modi-declares-victory-despite-election-blow.html. பார்த்த நாள்: 4 June 2024. 
  4. Mogul, Rhea; Yeung, Jessie; Madhok, Diksha; Radford, Antoinette (4 June 2024). "India decides: Modi declares victory in election but his party faces shock losses". CNN இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604051935/https://www.cnn.com/asia/live-news/india-general-election-results-06-04-24-intl-hnk/index.html. பார்த்த நாள்: 4 June 2024. 
  5. "Indian Lok Sabha elections of 2024". Encyclopædia Britannica. Archived from the original on 1 June 2024. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  6. Mogul, Rhea (16 March 2024). "Date set for largest democratic election in human history". CNN. Archived from the original on 21 April 2024. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  7. Mashal, Mujib (16 March 2024). "India's 2024 General Election: What to Know". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 21 April 2024. பார்க்கப்பட்ட நாள் 22 March 2024.
  8. "LS polls: EC reports record 642M voters, vows to combat fake narratives". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/elections/lok-sabha-election/ls-polls-ec-reports-record-642m-voters-vows-to-combat-fake-narratives-124060300625_1.html. 
  9. "India created world record with 64.2 crore people voting in Lok Sabha polls: CEC Rajiv Kumar" (in en-IN). The Hindu. 2024-06-03 இம் மூலத்தில் இருந்து 3 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240603142426/https://www.thehindu.com/elections/lok-sabha/india-created-world-record-with-642-crore-people-voting-in-lok-sabha-polls-cec-rajiv-kumar/article68245789.ece. 
  10. "20,000 citizens write to EC seeking action against Modi for hate speech". The News Minute. 2024-04-23. Archived from the original on 30 April 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  11. "Technical snags in EVMs disrupt polls in a few booths in Chennai". The Hindu. 2024-04-19. Archived from the original on 23 April 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  12. "SC asks EC to look into allegation of EVM malfunctioning in Kerala". Business Standard. 2024-04-18. Archived from the original on 25 April 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  13. Tiwari, Ayush (2024-05-18). "Varanasi poll: As 33 nominations are rejected, eight applicants allege that the process was rigged". Scroll.in. Archived from the original on 2 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  14. "NDA kickstarts process of government formation; Nitish, Naidu expected in Delhi". Hindustan Times. 5 June 2024. https://www.hindustantimes.com/india-news/nda-kickstarts-process-of-government-formation-nitish-naidu-expected-in-delhi-101717563049253.html. 
  15. Aggarwai, Mithil; Frayer, Janis Mackey (June 4, 2024). "India hands PM Modi a surprise setback, with his majority in doubt in the world's largest election". NBC News இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604151033/https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839. பார்த்த நாள்: June 4, 2024. 
  16. Poharel, Krishna; Lahiri, Tripti (3 June 2024). "India's Narendra Modi Struggles to Hold On to Majority, Early Election Results Show". Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604115138/https://www.wsj.com/world/india/india-election-2024-nanendra-modi-6179abad. பார்த்த நாள்: 4 June 2024. 
  17. Sinha, Shishir (2024-06-05). "NDA elects Modi as leader, President dissolves Lok Sabha". BusinessLine (in ஆங்கிலம்). Archived from the original on 5 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  18. Aggarwal, Raghav (4 June 2024). "INDIA bloc's combined strength plays spoilsport for BJP in 2 biggest states". Business Standard இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604151957/https://www.business-standard.com/elections/lok-sabha-election/india-bloc-s-combined-strength-plays-spoilsport-for-bjp-in-2-biggest-states-124060401570_1.html. 
  19. Aggarwai, Mithil; Frayer, Janis Mackey (June 4, 2024). "India hands PM Modi a surprise setback, with his majority in doubt in the world's largest election". NBC News இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604151033/https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839. பார்த்த நாள்: June 4, 2024. 
  20. Poharel, Krishna; Lahiri, Tripti (3 June 2024). "India's Narendra Modi Struggles to Hold On to Majority, Early Election Results Show". Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604115138/https://www.wsj.com/world/india/india-election-2024-nanendra-modi-6179abad. பார்த்த நாள்: 4 June 2024. 
  21. "7 Independents and 10 from non-aligned parties book LS seats". The Times of India இம் மூலத்தில் இருந்து 6 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240606160440/https://timesofindia.indiatimes.com/india/7-independents-and-10-from-non-aligned-parties-book-ls-seats/articleshow/110748555.cms. 
  22. "Lok Sabha elections: Meet seven candidates who won as independents". Archived from the original on 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.
  23. "Who are the 7 independents elected to the Lok Sabha?". Archived from the original on 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 8 June 2024.
  24. "President invites Narendra Modi to form government, oath ceremony on June 9". Archived from the original on 9 June 2024. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.
  25. "ndia's Modi sworn in as PM for third term, faces coalition challenges". ராய்ட்டர்சு. 9 June 2024. பார்க்கப்பட்ட நாள் 10 June 2024.
  26. "President appoints Narendra Modi as PM-designate; oath on Sunday evening". MSN.
  27. Ellis-Petersen, Hannah (2024-06-05). "Narendra Modi wins backing of allies to form Indian government" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து 6 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240606000854/https://www.theguardian.com/world/article/2024/jun/05/narendra-modi-wins-backing-of-allies-to-form-indian-government. 
  28. Sinha, Shishir (2024-06-05). "NDA elects Modi as leader, President dissolves Lok Sabha". BusinessLine (in ஆங்கிலம்). Archived from the original on 5 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.
  29. "From 'CEO CM' to kingmaker: You can't write off N. Chandrababu Naidu". The Economic Times. 2024-06-06 இம் மூலத்தில் இருந்து 7 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240607154946/https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/from-ceo-cm-to-kingmaker-you-cant-write-off-n-chandrababu-naidu/articleshow/110772110.cms?from=mdr. 
  30. "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  31. "Narendra Modi sworn in as Prime Minister for second time". Tribuneindia News Service. 30 May 2019. https://www.tribuneindia.com/news/archive/nation/narendra-modi-sworn-in-as-prime-minister-for-second-time-780564. 
  32. "The Constitution of India Update" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  33. "புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!" (in ta). https://tamil.samayam.com/latest-news/india-news/bill-proposes-extension-of-sc-st-quota-and-not-the-anglo-indian-community/articleshow/72441861.cms. 
  34. "Lok Sabha Election 2019 Phase 3 voting: How to vote without voter ID card". Business Today. 23 April 2019. Archived from the original on 24 May 2019.
  35. "General Voters". Systematic Voters' Education and Electoral Participation. Archived from the original on 4 January 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.
  36. "India elections 2024: Vote to be held in seven stages". BBC. 16 March 2024. https://www.bbc.com/news/world-asia-india-68573277. 
  37. "Date set for largest democratic election in human history". CNN. 16 March 2024. https://www.cnn.com/2024/03/16/india/india-election-date-intl/index.html. 
  38. "India's 2024 General Election: What to Know". The New York Times. 16 March 2024. https://www.nytimes.com/2024/03/16/world/asia/india-2024-election.html. 
  39. "Can the vote be rigged? Ahead of India election, old debate gets new life". Al Jazeera. 29 March 2024. https://www.aljazeera.com/news/2024/3/29/soul-of-the-king-can-indias-coming-elections-be-rigged. 
  40. Jacinto, Leela (13 April 2024). "India's mammoth elections: Nearly a billion voters, 44 polling days". France 24. https://www.france24.com/en/asia-pacific/20240413-india-s-mammoth-elections-nearly-a-billion-voters-44-polling-days. 
  41. "After BSP candidate death, polls in Madhya Pradesh's Betul to be held on May 7". 11 April 2024. https://timesofindia.indiatimes.com/india/after-bsp-candidate-death-polls-in-madhya-pradeshs-betul-to-be-held-on-may-7/articleshow/109205907.cms. 
  42. "Violence-Hit Outer Manipur Lok Sabha Seat To Vote In 2 Phases". ABP news. 18 April 2024. https://news.abplive.com/elections/outer-manipur-lok-sabha-seat-violence-vote-in-two-phases-first-phase-check-dates-1680979. 
  43. "Voter turnout of 66.14% in phase 1 and 66.71% in phase 2 recorded in General Elections 2024". pib.gov.in. Archived from the original on 2 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2 May 2024.
  44. "Polling now completed for 7 phases, largest electoral exercise in the world". pib.gov.in. Archived from the original on 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2 June 2024.
  45. M, Sambasiva Rao (15 May 2024). "AP Polling Percentage: Andhra Pradesh registers a polling percentage of 81.86, the highest so far in the country, says Chief Electoral Officer" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604040014/https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/andhra-pradesh-registers-a-polling-percentage-of-8186-the-highest-so-far-in-the-country-says-chief-electoral-officer/article68178365.ece. 
  46. "Voter Turnout – 65.68% as of 10 PM for phase 3". pib.gov.in. Archived from the original on 10 May 2024. பார்க்கப்பட்ட நாள் 10 May 2024.
  47. "Lok Sabha elections: BJP gets first seat, Surat candidate wins unopposed". The Hindustan Times. 22 April 2024 இம் மூலத்தில் இருந்து 25 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240425071735/https://www.hindustantimes.com/india-news/lok-sabha-elections-bjp-gets-first-seat-surat-candidate-wins-unopposed-101713779891163.html. 
  48. "BJP Candidate In Gujarat's Surat Wins Unopposed After Congress Pick Rejected, Others Withdraw Nomination". News18. 22 April 2024. Archived from the original on 25 April 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
  49. "'My vote snatched': How to win India's election without a single vote". Al Jazeera. 9 May 2024. Archived from the original on 10 May 2024. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
  50. Singh, Namita (2024-06-04). "India election results 2024 live: Shock for Modi as ruling BJP set to fall short of outright majority" (in en). The Independent இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604142717/https://www.independent.co.uk/asia/india/india-election-results-2024-modi-congress-bjp-counting-b2556305.html. 
  51. "A shock election result in India humbles Narendra Modi". The Economist இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604213850/https://www.economist.com/asia/2024/06/04/a-shock-election-result-in-india-humbles-narendra-modi. 
  52. "BJP's '400 paar' dream lies shattered: What could have gone wrong?". The Economic Times. 2024-06-04 இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604213408/https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/bjps-400-paar-dream-lies-shattered-what-could-have-gone-wrong/articleshow/110695170.cms?from=mdr. 
  53. "Did exit polls get it wrong? How INDI Alliance is defying predictions". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-04. Archived from the original on 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  54. "INDI Alliance shows big gains in country's biggest states: UP, Maharashtra. How?". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-04. Archived from the original on 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  55. "Kingmakers: Who are Chandrababu Naidu and Nitish Kumar? Why do they matter? Seats won by JD(U) and TDP". Archived from the original on 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 8 June 2024.
  56. "INDIA Alliance & NDA Coalition Partners Must Push For Restoring Independence of Institutions". Archived from the original on 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 8 June 2024.
  57. "Hint at bid by five BJP MPs to join TMC ahead of swearing-in ceremony for 18th Lok Sabha". Archived from the original on 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 8 June 2024.

வெளியிணைப்புகள்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளப் பக்கம்

"https://ta.chped.com/w/index.php?title=2024_இந்தியப்_பொதுத்_தேர்தல்&oldid=4002780" இலிருந்து மீள்விக்கப்பட்டது