உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம்
International Islamic University Malaysia
Universiti Islam Antarabangsa Malaysia
اونيۏرسيتي اسلام انتارابڠسا مليسيا
குறிக்கோளுரைஅறிவு நல்லொழுக்கத்தின் பூங்கா
(மலாய்: Taman Ilmu dan Budi)
(Garden of Knowledge and Virtue)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
(ஆய்வுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்23 மே 1983; 41 ஆண்டுகள் முன்னர் (1983-05-23)
நிதிக் கொடைRM 400 மில்லியன் (2018)
வேந்தர்துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா
(Tunku Azizah Aminah Maimunah Iskandariah)
கல்வி பணியாளர்
1,904 (2019)
மாணவர்கள்26,266 (2019)
அமைவிடம்
கோம்பாக், 53100 கோலாலம்பூர்]], மலேசியா
, , ,
வளாகம்700 ஏக்கர் (2.8 km²)
நிறங்கள்          தங்கம், பசுநீலம்
சேர்ப்புASAIHL, ACU, AUAP, இசுலாமிய உலகக் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு[1]
இணையதளம்www.iium.edu.my

மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Islam Antarabangsa Malaysia; ஆங்கிலம்:International Islamic University Malaysia என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக், புறநகரில் உள்ள ஓர் இசுலாமியப் பல்கலைக்கழகம் ஆகும். ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமான இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் ஆறு வளாகங்கள் உள்ளன:

பகாங், காம்பாங் புறநகர்ப் பகுதியில் இரண்டு மருத்துவ மைய வளாகங்கள் மற்றும் அறக்கட்டளை ஆய்வுகளுக்கான ஒரு மையம்; கோலாலம்பூரில் இரண்டு நகர வளாகங்கள் மற்றும் ஜொகூர் பாகோவில் ஒரு மொழி வளாகம் மற்றும் சுற்றுலா வளாகம் ஆகியவை உள்ளன.

பொது[தொகு]

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு எட்டு வெளிநாட்டு அரசாங்கங்கள்; மற்றும் இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) ஆகியவை நிதியுதவி செய்கின்றன. எனினும் இந்தப் பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் இசுலாமாபாத் பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (International Islamic University Islamabad); மற்றும் வங்காளதேசத்தின் சிட்டகாங் பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (International Islamic University Chittagong) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது ஆகும்.

இசுலாமிய விழுமியங்கள்[தொகு]

மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், இசுலாமிய கொள்கைகளின் அடிப்படையில் 23 மே 1983-இல் நிறுவப்பட்டது. இதன் அனைத்து துறைகளிலும் இசுலாமிய விழுமியங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகம் தனது 14 துறைகளின் வழியாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.[2]

1987-ஆம் ஆண்டு முதல், இந்தப் பல்கலைக்கழகம், உலகம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 70,000-க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]