உள்ளடக்கத்துக்குச் செல்

பிசு(குளோரோயெத்தில்) ஈதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசு(குளோரோயெத்தில்) ஈதர்
Bis(chloroethyl) ether
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-2-(2-குளோரோயீத்தாக்சி)ஈத்தேன்
வேறு பெயர்கள்
ஆக்சிசன் கடுகு; பிசு(2-குளோரோயெத்தில்) ஈதர்; 2,2'-டைகுளோரோடையெத்தில் ஈதர்; குளோரெக்சு; 2-குளோரோயெத்தில் ஈதர்; 1,1'-ஆக்சிபிசு[2-குளோரோயீத்தேன்]
இனங்காட்டிகள்
111-44-4 N
ChEBI CHEBI:34573 Y
ChEMBL ChEMBL1613350 Y
ChemSpider 21106016 Y
EC number 203-870-1
InChI
  • InChI=1S/C4H8Cl2O/c5-1-3-7-4-2-6/h1-4H2 Y
    Key: ZNSMNVMLTJELDZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H8Cl2O/c5-1-3-7-4-2-6/h1-4H2
    Key: ZNSMNVMLTJELDZ-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14688 Y
பப்கெம் 8115
வே.ந.வி.ப எண் KN0875000
  • ClCCOCCCl
UNII 6K7D1G5M5N
UN number 1916
பண்புகள்
C4H8Cl2O
வாய்ப்பாட்டு எடை 143.01 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்[1]
மணம் குளோரினேற்ற கரைப்பான்-போன்ற மணம்[1]
அடர்த்தி 1.22 கி/மி.லிட்டர்[1]
உருகுநிலை −50 °C; −58 °F; 223 K[1]
கொதிநிலை 178 °C; 352 °F; 451 K[1] சிதைவடையும்
10,200 மி.கி/லிட்டர்
ஆவியமுக்கம் 0.7 மி.மீபாதரசம் (20 °செல்சியசு)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நஞ்சு (T+)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N)
கொப்புளம் உண்டாக்கும்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H300, H310, H315, H319, H330, H351
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280
தீப்பற்றும் வெப்பநிலை 55 °C; 131 °F; 328 K
வெடிபொருள் வரம்புகள் 2.7%-?[1]
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 77 பகுதிகள் (எலி, 4 மணி)
மில்லியனுக்கு 152 பகுதிகள் (சுண்டெலி, 2 மணி)
மில்லியனுக்கு 500 பகுதிகள் (கினியா பன்றி, 1 மணி)[2]
மில்லியனுக்கு 250 பகுதிகள் (எலி, 4 மணி)
மில்லியனுக்கு 500 பகுதிகள் (கினியா பன்றி, 5 மணி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
மில்லியனுக்கு 15 பகுதிகள் (90 மி.கி/மீ3) [தோல்][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

பிசு(குளோரோயெத்தில்) ஈதர் (Bis(chloroethyl) ether) என்பது C4H8Cl2O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு 2-குளோரோயெத்தில் பதிலீடுகளைக் கொண்ட ஓர் ஈதராக இச்சேர்மம் கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாக இது காணப்படுகிறது. குளோரினேற்றம் அடைந்த கரைப்பானைப் போன்ற மணம் கொண்டிருக்கும். [3]

பிசு(குளோரோயெத்தில்) ஈதர் தொடர்புடைய கந்தக கடுகு S(CH2CH2Cl)2 சேர்மத்தை விட குறைவான வினைத்திறன் கொண்டதாகும்.[3] காரத்தின் முன்னிலையில், இது கேடகோலுடன் வினைபுரிந்து இருபென்சோ-18-கிரௌன்-6 சேர்மத்தை உருவாக்குகிறது:[4]

பிசு(குளோரோயெத்தில்) ஈதர் இருமல் அடக்கியான பெத்ரைலேட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பென்சைல் சயனைடு மற்றும் சோடாமைடின் இரண்டு மோலாருக்குச் சமமான பொருட்களுடன் வளையங்களை உருவாக்கும் வினையில் இது இணைக்கப்பட்டுள்ளது. வலிமையான காரத்துடன் சேற்த்து சூடாக்கும்போது இது இருவினைல் ஈதர் எனப்படும் ஒரு மயக்க மருந்தைக் கொடுக்கிறது:[5]

O(CH2CH2Cl)2 + 2 KOH → O(CH=CH2)2 + 2 KCl + 2 H2O

நச்சுத்தன்மை[தொகு]

பிசு(குளோரோயெத்தில்) ஈதர் சேர்மத்தின் உயிர்கொல்லும் அளவு 74 மி.கி/கி.கி ஆகும்.[3] (வாய்வழி, எலி). ஒரு சாத்தியமான புற்றுநோய் ஊக்கியாக இது கருதப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0196". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Dichloroethyl ether". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 3.2 Wang, Q. Q.; Begum, R. A.; Day, V. W.; Bowman-James, K. (2012). "Sulfur, Oxygen, and Nitrogen Mustards: Stability and Reactivity Wang, Qi-Qiang; Begum, Rowshan Ara; Day, Victor W.; Bowman-James, Kristin". Organic & Biomolecular Chemistry 10 (44): 8786–8793. doi:10.1039/c2ob26482j. பப்மெட்:23070251. 
  4. Pedersen, C. J. (1972). "Macrocyclic Polyethers: Dibenzo-18-Crown-6 Polyether and Dicyclohexyl-18-Crown-6 Polyether". Organic Syntheses 52: 66. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV6P0395. ; Collective Volume, vol. 6, p. 395
  5. Wollweber, Hartmund (2005), "Anesthetics, General", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_289
  6. "CDC - Immediately Dangerous to Life or Health Concentrations (IDLH): Dichloroethyl ether - NIOSH Publications and Products". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-10-31.
"https://ta.chped.com/w/index.php?title=பிசு(குளோரோயெத்தில்)_ஈதர்&oldid=3986084" இலிருந்து மீள்விக்கப்பட்டது