உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மா சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மா சுப்பிரமணியம்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிநடனம், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், நடன ஆசிரியை, எழுத்தாளர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
சமயம்இந்து
பெற்றோர்கே. சுப்பிரமணியம்-எஸ். டி. சுப்புலட்சுமி
உறவினர்கள்எஸ் வி இரமணன் (சகோதரர்)

பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.[1]

குடும்பம்[தொகு]

இவரது தந்தை கே. சுப்பிரமணியம், தாய் எஸ். டி. சுப்புலட்சுமி, சகோதரர் எஸ் வி இரமணன் ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.

கல்வி[தொகு]

பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]


"https://ta.chped.com/w/index.php?title=பத்மா_சுப்ரமணியம்&oldid=4008471" இலிருந்து மீள்விக்கப்பட்டது