தேசிய ஊக்க விருது
தேசிய ஊக்க விருது (கேந்திரிய வித்யாலயா) என்பது தேசிய அளவில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தன் ஊழியர்கள் 30 பெருக்கு (25 ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்) ஒவ்வொரு ஆண்டும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவன நாளினை முன்னிட்டு தேசிய அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இந்த விருதினை கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையர் வழங்குவார்.[1][2][3]
செயல்முறை[தொகு]
விருதிற்கு விண்ணப்பத்தினை ஊழியர்களிடமிருந்து வழங்க இந்நிறுவனம் கோரும் போது, ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விருதிற்கு விண்ணப்பித்த அனைத்து போட்டியாளர்களும் 7 முதல் 10 நிமிடங்கள் கால அளவில், மாணவர்கள், அமைப்பு மற்றும் தேசத்திற்கான தாங்களின்சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் பற்றி பிராந்திய அளவிலான சுயாதீன நடுவர் மன்றத்தின் முன் விளக்கி எடுத்துரைக்க வேண்டும்.[4] [5] இந்த விருதிற்குப் பெறப்படும் 99[6] விண்ணப்பதாரர்களிடமிருந்து (72 ஆசிரியர் மற்றும் 27 கற்பித்தல் அல்லாத பணியில் உள்ளவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுத் தேர்விற்கு அனுப்பப்படுவர். இவர்களைத் தேசிய அளவில் நியமிக்கப்படும் நடுவர்கள் தேர்ந்தெடுப்பர்.[1][7][8][9]
விருது[தொகு]
கேந்திரிய வித்யாலயா நிறுவன தினத்தன்று (திசம்பர் 15) வழங்கப்படும் இந்த விருதுக்கு மொத்தம் 30 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த விருது ரூ. 20,000/-, பொன்னாடை, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Incentive Award of Kendriya Vidyalaya" (PDF). Kendriya Vidyalaya. 20 Oct 2020. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
- ↑ EB Bureau (15 Dec 2019). "KVS Foundation Day: 30 Teachers Receive 'National Incentive Award'". Education Bytes. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
- ↑ "Kendriya Vidyalaya Sangathan Foundation Day". Indian Bureaucracy. 15 Dec 2016. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
- ↑ "KVS regional incentive award ceremony held in Dimapur". 29 Jan 2020 இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210819103019/https://www.nagalandpost.com/kvs-regional-incentive-award-ceremony-held-in-dimapur/210472.html.
- ↑ "KVS awards presented to teaching faculty". 15 Dec 2014. https://www.tribuneindia.com/news/archive/features/pm-modi-arrives-in-portugal-on-first-leg-of-3-nation-tour-18481.
- ↑ "KVS Foundation Day: 95 teachers awarded for outstanding, meritorious services". 15 Dec 2017. http://www.uniindia.com/kvs-foundation-day-95-teachers-awarded-for-outstanding-meritorious-services/india/news/1078042.html.
- ↑ "A moment of pride". The Hans India. 18 Dec 2017. https://www.thehansindia.com/posts/index/Hyderabad-Tab/2017-12-17/A-moment-of-pride/346099.
- ↑ "केंद्रीय विद्यालय संगठन लखनऊ संभाग द्वारा आयोजित किया गया प्रोत्साहन पुरस्कार समारोह". Amar Ujala. 17 Feb 2020. https://www.amarujala.com/lucknow/incentive-award-ceremony-organized-by-kendriya-vidyalaya-sangathan-lucknow-division.
- ↑ "KVS holds Incentive Award ceremony". The Pioneer (India). 21 Dec 2017. https://www.dailypioneer.com/2017/state-editions/kvs-holds-incentive-award-ceremony.html.