உள்ளடக்கத்துக்குச் செல்

தயோபார்மால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோபார்மால்டிகைடு
Structural formula of thioformaldehyde
Ball-and-stick model of the thioformaldehyde molecule
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தேன்தையால்
இனங்காட்டிகள்
865-36-1
ChemSpider 71446
EC number 200-454-1
InChI
  • InChI=1S/CH2S/c1-2/h1H2
    Key: DBTDEFJAFBUGPP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79115
  • C=S
பண்புகள்
CH2S
வாய்ப்பாட்டு எடை 46.09
தோற்றம் அறியப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயோபார்மால்டிகைடு (Thioformaldehyde) CH2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். இந்த சேர்மம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது, ஏனெனில் இது 1,3,5-முத்தையேன் என்ற சில்படியாக மாறுகிறது. நிறமற்றதாகக் காணப்படும் 1,3,5-முத்தையேன் சில்படியும் இதே மூலக்கூற்று வாய்ப்பாட்டல் விவரிக்கப்படுகிறது. இயல்பான நிலப்பரப்பு நிபந்தனைகளின் கீழ் தயோபார்மால்டிகைடு நிலைப்புத்தன்மையற்று இருந்தாலும் இம்மூலக்கூறு விண்மீன் ஊடகத்தில் காணப்படுகிறது.[1] இதன் அடிப்படை தன்மையால் அதிக கவனத்தை ஈர்க்கிறது.[2] தயோபார்மால்டிகைடு சேர்மத்தின் சங்கிலிகள் மற்றும் வளையங்கள் உருவாக்கும் போக்கு இரட்டை பிணைப்பு விதியின் ஒரு வெளிப்பாடாகும்.

ஒரு சில்படியாக உருவாகும் போக்கைக் கொண்டிருந்தாலும் Os(SCH2)(CO)2(PPh3)2 போன்ற தயோபார்மால்டிகைடின் பல உலோக ஒருங்கிணைவுச் சேர்மங்களை காணமுடிகிறது.[3]

தங்குசுடன் தயோபார்மால்டிகைடு ஒருங்கிணைவுச் சேர்மத்தின் தொகுப்பு வினை
ஒசுமியம் தயோபார்மால்டிகைடு ஒருங்கிணைவுச் சேர்மத்தின் தொகுப்பு வினை

மேற்கோள்கள்[தொகு]

  1. Despois, D., "Radio Line Observations of Molecular and Isotopic Species in Comet C/1995 O1 (Hale-Bopp) Implications on the Interstellar Origin of Cometary Ices", Earth, Moon, Planets 1999, 79, 103-124.
  2. Clouthier, D. J.; Ramsay, D. A. (1983). "The Spectroscopy of Formaldehyde and Thioformaldehyde". Annual Review of Physical Chemistry 34: 31–58. doi:10.1146/annurev.pc.34.100183.000335. Bibcode: 1983ARPC...34...31C. https://archive.org/details/sim_annual-review-of-physical-chemistry_1983_34/page/31. 
  3. Schenk, Wolfdieter A. (2011). "The coordination chemistry of small sulfur-containing molecules: A personal perspective". Dalton Trans 40 (6): 1209–1219. doi:10.1039/C0DT00975J. பப்மெட்:21088787. 
"https://ta.chped.com/w/index.php?title=தயோபார்மால்டிகைடு&oldid=3520647" இலிருந்து மீள்விக்கப்பட்டது