உள்ளடக்கத்துக்குச் செல்

சோனா ஹைடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனா ஹைடன்
சோனா ஹைடன்
பிறப்பு1 சூன் 1979 (1979-06-01) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை

சோனா ஹைடன் (Sona Heiden) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2002இல் "மிஸ் தமிழ்நாடு" பட்டத்தை வென்றுள்ளார். கோலிவுட் திரைப்படங்களில் தனது சிறந்த குத்தாட்டப் பாடல்களால் புகழ் பெற்றார். இவர் 2008 இல் குசேலன் என்ற தமிழ் திரைப்படத்தில் தோன்றினார். [1] சென்னையில் "யுனிக்" என்ற ஆடை விற்பனைக் கடையைத் தொடங்கினார். இதை நடிகை ஷில்பா ஷெட்டி திறந்து வைத்தார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சோனா ஹைடன் 1979 சூன் 1 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை போர்த்துகல் மற்றும் பிரான்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தாய் இலங்கைத் தமிழர் ஆவார். சென்னை, இலூசரஸ் சாலை கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவைப்பில் மேம்பட்ட சான்றிதழ் பட்டம் பெற்றார். இவருக்கு இரண்டு இரு தங்கைகளும் உள்ளனர்.

இவர் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டில் சென்னையில் தேனாம்பேட்டையில் யுனிக் என்ற பெயரில் ஒரு பெண்கள் ஆடை விற்பனையகத்தைத் திறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
  2. http://chennaionline.com/cityfeature/Trends/Jan09/01story77.aspx

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=சோனா_ஹைடன்&oldid=3759873" இலிருந்து மீள்விக்கப்பட்டது