உள்ளடக்கத்துக்குச் செல்

குவாரி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியாவில் உள்ள குவாரி ஏரி
கேரளாவில் கைவிடப்பட்ட கல் குவாரியில் உள்ள குவாரி ஏரி

குவாரி (Quarry) என்பது பூமியில் பல்வேறு தாரபட்ட நிலப்பகுதியில் கிடைக்கும். அறியவகை கனிமங்கள் மற்றும் தாது பொருள்களை பெறுவதற்காக சுரங்ககங்களை போல் மலைகள் மற்றும் சமவெளி நிலப்பரப்புகளை தோண்டப்படுவது அல்லது குடையப்படுவதாகும். இவ்விடங்களில் அந்த வேலைகள் முடிந்த பிறகோ அல்லது நடைபெறும்போதோ ஏற்படுத்தப்படும் செயற்கையான இடமே குவாரியாகும்.

பயன்பாடுகள்[தொகு]

  • இவ்வகை குவாரிகள் அதிகபட்சமாக மனித வாழ்வில் அன்றாட பயன்பாட்டில் உள்ள கற்கள், மணல்கள், சிமெண்ட் போன்ற கனிம/தாது பொருள்களை மலைகள் மற்றும் சமவெளி நிலப்பரப்பில் இருந்து பெறுவதற்கான இடமாகும்.

கற்கள்[தொகு]

  • கற்கள் பெரும்பாலானவை (கல்மலை) அதாவது கற்பாறை மலைகளின் பாறைகள் மீது டைனமேட் வெடியை வெடிக்க செய்து அதில் சிதறுண்டு வரும் அனைத்து பாராங்கற்களையும் கல் உடைக்கும் இயந்திரங்கள் மூலம் பல அளவுகளுக்கு தகுந்தார் போல் உடைக்க செய்து கற்களாக பெறப்படுகின்றது.
  • அதன் வகைகள் சதுர பெருங்கல், கருங்கல் (பெருஞ்சல்லி), ஜல்லி (சிறிய கற்கள்), சிப்ஸ் (மிக சிறிய வகையிலான கற்கள்) பிற கட்டுமான பயன்பாட்டிற்கு தேவையான கற்கள் மற்றும் விலை உயர்ந்த கிராணைட், கடப்பா, டைல்ஸ், மார்பில்ஸ், மொசைக் போன்ற கற்களாகும்.
  • அதே போன்று வைரம் மற்றும் நவரத்னங்கள் சார்ந்த விலை மதிப்பில்லாத அறியவகை ஆபரண கற்களும் பெறபடுகின்றனர்.

மணல்கள்[தொகு]

  • நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தபடும் ஆற்று மணல்கள் பல்வேறு தாரபட்ட இடங்களுக்கும், நிலத்தின் தன்மைக்கு தகுந்தார் போல் மாறுபடுகிறது.
  • அதன்படி நல்ல வளமுள்ள நிலப்பகுதியில் ஆற்றில் மணல்கள் எடுப்பதற்கு அரசு அனுமதிக்கபட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆற்றின் அருகே குவாரி அமைத்து மணல்கள் விநியோகம் செய்யபடுகிறது.
  • அதே போல் தற்காலமாக ஆற்று மணல் அதிகம் பயன்படுத்த கூடாது என்ற சில அரசாங்க தடையால் அதற்கு மாற்று பொருளாக கல்மலைகளில் இருந்து பெறப்படும் கல் உடைக்கும் இயந்திரத்தை போலவே பாராங்கற்களை பொடியாக்கி மணலாக்கும் இயந்திரம் மூலம் மணலாக M-Sand, P-Sand என்ற நிலையில் இரு வகையான மணல்களும் பல கட்டுமான பயன்பாட்டிற்காக கற் குவாரிகளில் இருந்து பெறப்படுகிறது.
  • ஆனால் இவ்வகை மணல்கள் ஆற்று மணல்கள் அளவிற்கு வலுவான பசை தன்மை இல்லாமல் போனாலும் ஆற்று மணலுக்கு அடுத்த படியாக மாற்று கட்டுமான பொருளாக பயன்படுத்தி கொள்ளப்படுகிறது.
  • மண்களான தவுட்டு மண் எனப்படும் சவுடு மண்களும் சில சமவெளி நிலப்பரப்புகளில் இருந்து அல்லபடுகிறது.

சிமெண்ட்[தொகு]

  • சிமெண்ட் மற்றும் சுண்ணாம்புக்கல்கள், பிற வகை கனிம/தாது பொருட்களும் மணல்களாகவோ, கடினமான கற்களாகவோ பெறுவதற்கு குவாரி மூலம் கட்டமைக்கபட்டு பெறுபடுகின்றது.

செயற்கை உருவாக்கம்[தொகு]

  • சுரங்க செயல்பாடுகளின் போது அங்கு கசியும் அல்லது தேங்கும் நீர் வெளியேற்றப்படும். அந்தப் பணிகள் முடிவடைந்த பின்பு அங்கே கசியும் நிலத்தடி நீர் மற்றும் பெய்யும் மழைநீர் இத்தகைய குழிவுகளில் சேகரிக்கப்படும். இவ்வாறு மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் குட்டைகள் அல்லது நீர் தேங்கும் பகுதிகள் குவாரி ஏரி என்றழைக்கப்படும்.[1].

மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்[தொகு]

  • நீர் நிறைந்த சுரங்க குவாரிகள் பெரும்பாலும் 50 அடி (15 மீ) அல்லது அதற்கும் அதிகமாக ஆழம் கொண்டதாகவும், குளிராகவும் காணப்படும்.
  • இத்தகைய ஏரிக்களில் உள்ள குளிர்ந்த நீர்[2] அங்கே நீந்தும் மனிதர்களின் தசைகளை திடீரென வலுவிழக்கச் செய்து அதன் காரணமாக குளிர்ந்த நீர் அதிர்ச்சி மற்றும் மன தாழ்வுநிலை போன்றவைகளை ஏற்படுத்தும்.[3]
  • இத்தகைய ஏரிக்களில் உள்ள நீர் பெரும்பாலும் மிகவும் தெளிவாக இருந்தாலும், அதனுள் மூழ்கி இருக்கும் சுரங்க கற்கள் மற்றும் கைவிடப்பட்ட உபகரணங்கள் போன்றவை அங்கே குதித்து விளையாடும் மனிதர்களை காயப்படுத்துவதன் மூலமும், முழுகுவதன் மூலமும் இறக்க நேரிடும்.[4]
  • இந்த நீர் நிரப்பப்பட்ட குவாரிகளில் ஆபத்தான மின்னோட்டங்கள், சுண்ணாம்பு மற்றும் கல்நார் (குறிப்பாக சிலிக்கா) போன்றவை இருக்கலாம், இத்தகைய தனிமங்களின் தீவிர பாறை நசுக்கும் நடவடிக்கையின் காரணமாக , தண்ணீர் கனிம அல்லது கிரானைட் ஆகியவைகளின் நுண்ணிய தூள்கள், தண்ணீருடன் கலந்து நச்சுத்தன்மையுடையதாகவும், சேறு போன்றும் காணப்படும். இவ்விடங்களில் எ கோலி அல்லது சதைகளை அரிக்கும் பாக்டிரீயாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைந்துள்ளது.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. Chang, Ni-Bin. Effects of Urbanization on Groundwater: An Engineering Case-Based Approach ... p. 33. பார்க்கப்பட்ட நாள் May 31, 2012. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "Abandoned Mine and Quarry Accidents Claim Several Lives per Year". Geology.com. 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
  3. "American Canoe Association explanation of cold shock". Enter.net. Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
  4. "US Dept. of Labor list of mine related fatalities". Msha.gov. Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
  5. "Stay Out - Stay Alive". US Department of Labour. Archived from the original on 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
"https://ta.chped.com/w/index.php?title=குவாரி_ஏரி&oldid=4033462" இலிருந்து மீள்விக்கப்பட்டது