உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டுமுக் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டுமுக் சிவன் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குட்டுமுக் மகாதேவருக்குக்குரிய கோயிலாகும். இக்கோயில் திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூருக்கு வடகிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1] இங்கு வழிபடப்படுகின்ற சிலை 300 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பாக எவ்வித வரலாற்று பதிவுகளும் காணப்பெறவில்லை. 'குட்டுமுக்' என்ற பெயர் குட்டி மக் என்பதிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

இங்கு வழிபடப்படுகின்ற சிலை "கிராத மூர்த்தி" என்று அழைக்கப்படுன்ற, சிவனின் மற்றொரு வடிவமாகும். இந்த வடிவில்தான் இறைவன், அர்ஜுனனின் பக்தியைச் சோதிப்பதற்காக, வேட்டைக்காரனாகத் தோன்றி அவனுடன் சண்டை போட்டதாகக் கூறுவர். அர்ஜுனனின் பக்தியால் ஈர்க்கப்பட்ட சிவன் அவருக்கு " பசுபதாஸ்திரம் " என்ற ஓர் ஆயுதத்தைத் தந்தார். ஒருமுறை மைசூர் இராணுவம், திப்பு சுல்தான் தலைமையில் இக்கோயிலைத் தாக்க முற்பட்டபோது, எங்கிருந்தோ வெளியே வந்த தேனீக்கள் கூட்டம் அவர்களைத் தாக்கி, அவர்களை பின்வாங்கச் செய்தது.[2]

துணைத்தெய்வங்கள்[தொகு]

கணபதி, ஐயப்பன், மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கான சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

குட்டுமுக் உற்சவம் இங்கு பத்து நாட்கள் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kuttumuck Siva Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-22.
  2. Shri Mahadeva Temple

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=குட்டுமுக்_சிவன்_கோயில்&oldid=3822523" இலிருந்து மீள்விக்கப்பட்டது