உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தேச மரபணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தேச மரபணு (Putative) என்பது கருவமிலங்களில் உள்ள, நியூக்கிளியோரைட்டு வரிசையின் ஒரு பகுதியாகும். இவற்றிலிருந்து உருவாகக்கூடிய புரதங்களோ, அவற்றின் செயல்பாடுகளோ முழுமையாக அறியப்படாததாக இருந்தாலும், இவற்றின் திறந்த வாசிப்புச் சட்டகத்தின் (en:Open reading frame) அடிப்படையில், இவை மரபணுக்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[1][2] எடுத்துக்காட்டாக, தற்காலிகமாக மரபணு 57 என்று பெயரிடப்பட்ட உத்தேச மரபணுவானது, Bacillus subtilis என்னும் பாக்டீரியாவைத் தாக்கும், பாக்டீரியா விழுங்கி SP01 ஆல் சுரக்கப்படும் ஒரு புரதத்தை குறியிட்டுக் காட்டும் மரபணுவாகும்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Putative gene". Biology online dictionary. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Slonczewski, Joan; John Watkins Foster (2009). Microbiology: An Evolving Science. New York: W.W. Norton & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-97857-5. இணையக் கணினி நூலக மைய எண் 185042615.
  3. Stewart CR, Gaslightwala I, Hinata K, Krolikowski KA, Needleman DS, Peng AS, Peterman MA, Tobias A, Wei P. (ஜூலை 5 1998). "Genes and regulatory sites of the "host-takeover module" in the terminal redundancy of Bacillus subtilis bacteriophage SPO1". Virology 246 (2): 329-40. 
"https://ta.chped.com/w/index.php?title=உத்தேச_மரபணு&oldid=3739207" இலிருந்து மீள்விக்கப்பட்டது