ஆற்று ஆலா
ஆற்று ஆலா | |
---|---|
![]() | |
சம்பல் ஆறு மத்திய பிரதேசம் இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | இசுடெர்னா ஆரண்டியா
|
ஆற்று ஆலா (River Tern) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆலா ஆகும். இது ஈரான் கிழக்கிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு இடையிலும், மியான்மர் முதல் தாய்லாந்திற்கும் இடையில் உள்ள உள்நாட்டு ஆற்றுப் பகுதிகளில் ஒரு குடியிருப்பாளராக இருந்து இனப்பெருக்கம் செய்வதாக உள்ளது.
இது காக்கை அளவு இருக்கும். சுமார் 43 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். நன்கு பிளவுபட்ட வாலும் நீண்ட கூரான இறக்கைகளும் கொண்டது. குட்டையான சிவந்த கால்களை கொண்டது. அலகின் நிறம் நல்ல மஞ்சள், குளிர்காலத்தில் கரும்புள்ளிகளோடும் கோடுகளோடும் காணப்படும் தலை. கோடையில் நல்ல கருப்பு நிறமாக மாறும்.
காணப்படும் பகுதிகள்[தொகு]
ஆறுகளில் மணற்பாங்கான திட்டுக்களைச் சார்ந்து காணலாம். பெரிய நீர்நிலைகளின் மீதும் பறந்து இரை தேடும். இறக்கைகளை மடக்கி நீரில் பாயும் இது. வெளிப்படும்போது அலகில் மீன் இருக்கக் காணலாம். இறக்கைளில் ஒட்டியிருக்கும் நீரினை உலுக்கியபடி பறந்தபடியே மீனின் தலை முதலில் உள்ளே செல்லும்படி விழுங்கும் இரை தேடி முடிந்தபின் பலவும் கூட்டமாக ஆற்று மணலில் காற்று வீசும் திசையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் இரவுப் பொழுதையும் மணல் மேடுகளிலேயே கழிக்கும். [2]
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/River_Tern_Sterna_aurantia_Purle_Lake_Shimogga.jpg/220px-River_Tern_Sterna_aurantia_Purle_Lake_Shimogga.jpg)
உணவு[தொகு]
பெரும்பாலும் மீன்கள். இறால் வகை உயிரினங்களையும், நீரில் உள்ள பூச்சிகளையும் உண்ணும்.
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/River_Tern_%28Sterna_aurantia%29-_Immatures_W_IMG_9725.jpg/220px-River_Tern_%28Sterna_aurantia%29-_Immatures_W_IMG_9725.jpg)
இனப்பெருக்கம்[தொகு]
மார்ச் முதல் மே வரை ஆற்று மணல் மேடுகளில் சிறுகுழி பறித்து பலவும் அருகருகே 3 முதல் 4 முட்டைகள் இடும். அணைக்கரை அருகே கொள்ளிடத்தில் மே மாதத்தில் இவை இனப்பெருக்கம் செய்த குறிப்பு உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2020). "Sterna aurantia". IUCN Red List of Threatened Species 2020: e.T22694537A180171504. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22694537A180171504.en. https://www.iucnredlist.org/species/22694537/180171504. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ தமிழ்நாட்டுப்பறவைகள் முனைவர் க. ரத்னம் மெய்யப்பன் பதிப்பகம், பக்கம் எண்:59