உள்ளடக்கத்துக்குச் செல்

தீனா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தீனா
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஜெய பிரசாந்த். என்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
சுரேஷ் கோபி
லைலா
ஒளிப்பதிவுஅரவிந்த்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்விஜயம் சினி கம்பைன்சு
வெளியீடுசனவரி 14, 2001 (2001-01-14)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தீனா (Dheena) அஜீத் குமார் நடித்து 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.[2]

தயாரிப்பு[தொகு]

ஏ. ஆர். முருகதாஸ் இயக்குநர் எஸ். ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரியும்பொழுதே நடிகர் அஜித் குமாரிடம் இப்படத்தில் லைலா மற்றும் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடிக்க சம்மதம் பெற்றார்.[3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

தீனா
பாடல்கள்
வெளியீடு23 திசம்பர் 2000
ஒலிப்பதிவு2000
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்25:32
இசைத்தட்டு நிறுவனம்டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
'ரிஷி
(2000)
தீனா 'துள்ளுவதோ இளமை
(2001)

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ஆவார். திசம்பர் 2000 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிப் பாடல்களாகும். யுவன் சங்கர் ராஜா தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள அவருக்கு இத்திரைப்படம் உதவியது.

எண் பாடல் பாடியவர்கள் நீளம்
1 "என் நெஞ்சில் நீங்களானே" ஹரிஷ் ராகவேந்திரா 4:22
2 "காதல் வெப்சைட் ஒன்று" சங்கர் மகாதேவன், ஹரிணி, டிம்மி 5:35
3 "நீ இல்லை என்றால்" பவதாரிணி, முருகன் 5:27
4 "சொல்லாமல் தொட்டுச் செல்லும்" ஹரிஹரன் 5:19
5 "வத்திக்குச்சி பத்திக்காதடி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:45

வகை[தொகு]

அதிரடித் திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Warrier, Shobha (18 January 2001). "Ajith hospitalised!". Rediff.com. Archived from the original on 26 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 September 2011.
  2. "Dheena - AV Digital". AV Digital. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.
  3. http://ajithkumar.free.fr/derniere08.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=தீனா_(திரைப்படம்)&oldid=4008875" இலிருந்து மீள்விக்கப்பட்டது